இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் செயலர் ராஜ்நிஜ் ஜெயின் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்,
- ஊரடங்கு காலத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் விடுதிகளில் பாதுகாப்புடன் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது.
- மனநல ஆலோசகர்கள் அல்லது கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களை தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க வேண்டும்.
- கரோனோ ஊரடங்கு காலத்தில் மாணவர்கள் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதை அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்களை தொடர்புகொண்டு தெரிவிக்க வேண்டும்.
- விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை கண்காணிக்க பேராசியர்கள் அடங்கிய குழுவினை ஏற்படுத்திட வேண்டும்.
- பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர்களுடன் தொலைபேசி, இமெயில், டிஜிட்டல், சமூகவலைதளங்களின் மூலம் தொடர்பு கொண்டு மன அழுத்தத்தை போக்கும் வகையில் ஆலோசனை வழங்க வேண்டும்.
- கரோனாவிற்கு எதிராக மக்கள் தங்களை பாதுகாத்திட அரசு தெரிவித்துள்ள அனைத்து தகவல்களையும் மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் தெரிவிக்க வேண்டும்.
- மாணவர்கள் தங்களின் மனநல ஆலோசனைக்கு கட்டணமில்லா எண்ணாண 0804611007-ஐ தொடர்புகொள்ளலாம். அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் இது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானிய குழுவின் இணையதளத்தில் பதிவேற்றவும் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.