தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எரிசக்தி துறையில் இத்தாலி முதலீடு - பெட்ரோலியத் துறை அமைச்சர் உறுதி!

டெல்லி: எரிசக்தி துறையில் இத்தாலி முதலீட்டை இந்தியா ஈர்க்கும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எரிசக்தி துறையில் இத்தாலி முதலீடு-பெட்ரோலிய அமைச்சர் உறுதி!எரிசக்தி துறையில் இத்தாலி முதலீடு-பெட்ரோலிய அமைச்சர் உறுதி!
எரிசக்தி துறையில் இத்தாலி முதலீடு-பெட்ரோலிய அமைச்சர் உறுதி!

By

Published : Jul 22, 2020, 4:42 AM IST

பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இத்தாலியின் இந்தியாவுக்கான தூதர்களுடன் நேற்று (ஜூலை 21) காணொலி மூலம் உரையாற்றினார்.

இது குறித்து பேசிய அவர், “இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதில் பல பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். அதுமட்டுமின்றி முன்னணி எரிசக்தி உள்கட்டமைப்பு நிறுவனமான எஸ்என்ஏஎம் நிர்வாக இயக்குனருடன் கலந்துரையாடினேன். இதில் கடந்த 75 ஆண்டுகளாக ஐரோப்பா முழுவதும் அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், அதே போன்று இந்தியாவிலும் செயல்பட விரும்புவதாகவும் எஸ்என்ஏஎம் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்” என்றார்.

மேலும், “இதன்மூலம் இந்தியாவை இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் நாடாக மாற்றுவது மட்டுமின்றி, இந்தியாவை எரிவாயு அடிப்படையிலான பொருளாதார நாடாக மாற்றலாம்” எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க...'மேற்கு வங்கத்தில் மண்ணின் மைந்தர்கள் ஆட்சி': பாஜகவை விளாசிய மம்தா பானர்ஜி!

ABOUT THE AUTHOR

...view details