நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை அதிவேக கண்ணாடி ஒளியிழை (ஆப்டிக்கல் ஃபைபர்) இணையச் சேவை மூலம் இணைப்பதற்காக மத்திய அரசு 'பாரத் நெட்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம் சுமார் 6.25 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தை 1,950 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், டெண்டர் விடப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், முறைகேடு நடந்துள்ளது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.