தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வாக்காளர்களிடம் கெஞ்சிய மத்திய அமைச்சர் : காரணம் என்ன தெரியுமா? - பிகார் தேர்தல்

பாட்னா : பிகார் தேர்தலில் பாஜகவின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களிடம் கெஞ்சியுள்ளார்.

மத்திய அமைச்சர்
மத்திய அமைச்சர்

By

Published : Oct 20, 2020, 3:58 PM IST

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மத்திய இணையமைச்சர் நித்தியானந்த் ராய், பாஜக வேட்பாளரான அவதேஷ் சிங்குக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கெஞ்சியுள்ளார். இந்தப் பரப்புரையின்போது, அவர் 11 முறை மக்களிடம் கோரிக்கை விடுத்தார். நித்தியானந்த் ராயின் சொந்த மாவட்டமான வைஷாலியிலிருந்து ஏழு முறை போட்டியிட்ட அவர், தோல்வி பெற்றதே இல்லை.

பரப்புரையில் பேசிய ராய், "நாங்கள் எல்லையில் திறமையாக போராடவுள்ளோம். எல்லைக்குள் அத்துமீறினால், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். ஆனால், தேர்தலைப் பொறுத்தவரை மக்கள் முன்பு கை கட்டி நின்று அவர்களின் ஆதரவைக் கேட்பதில் எனக்கு தயக்கம் இல்லை" எனத் தெரிவித்தார்.

வைஷாலி மாவட்டத்தில் ரகோபூர் உள்பட எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ரகோபூர் தொகுதியில்தான் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடவுள்ளார். 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், இந்தத் தேர்தலில் கடும் சவாலை சந்திக்கவுள்ளது.

இதையும் படிங்க: மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் மோடி

ABOUT THE AUTHOR

...view details