சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவி பல ஆயிரம் பேர் உயிரிழந்து, லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று நாடு முழுவதும் உள்ள பல்வேறு உற்பத்தி, தொழில், வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் பேசினார்.
அப்போது, அவர் பேசுகையில், "ஊழியர்கள் நம் சொத்துகள் மட்டுமல்ல, அவர்களை வீட்டைவிட்டு வெளியே வர அனுமதித்தால் அதுவே கோவிட்-19 எளிதாகப் பரவுவதற்கு சாத்தியக்கூறாக அமையும். இந்த நேரத்தில்தான் நீங்கள் ஊழியர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும்" என வர்த்தகச் சங்கங்களை கேட்டுக்கொண்டார்.