தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பியூஷ் கோயலுக்கு மாற்றப்பட்ட பஸ்வானின் துறைகள் - பியூஷ் கோயலுக்கு மாற்றப்பட்ட பஸ்வானின் துறைகள்

டெல்லி: பஸ்வானின் மறைவைத் தொடர்ந்து, அவரிடமிருந்த உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்தை பியூஷ் கோயல் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

By

Published : Oct 9, 2020, 2:38 PM IST

மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்று (அக். 8) காலமானார். இந்நிலையில், பஸ்வானிடமிருந்த அமைச்சகம், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தையும் கோயலே கவனித்துவருகிறார்.

டெல்லியில் உள்ள வீட்டில் ராம்விலாஸ் பஸ்வான் உடலுக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். பஸ்வான் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details