தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கடிதம்!

ஜல் ஜீவன் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர்
மத்திய நீர்வளத்துறை அமைச்சர்

By

Published : Jun 4, 2020, 9:32 PM IST

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநிலத்தில் ஜல் ஜீவன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழாயை அமைத்து, தூய்மையான குடிநீர் வழங்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டின் செயல் திட்டத்தை அமைச்சகத்திடம் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கினால், கிராமப்புற பெண்கள், சிறுமிகளின் துயர் நீங்கும் என மத்திய அமைச்சர் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதன் மூலம் போதுமான அளவில் தரமான குடிநீரை அனைத்து வீடுகளுக்கும் தினந்தோறும் வழங்க முடியும் என மத்திய அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில், "இந்த நோக்கத்தை அடைவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தரும். குழாய்கள் எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறதோ, அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதி ஒதுக்கவுள்ளது. 2019-20 காலகட்டத்தில், 13.86 லட்சம் வீடுகளில் குழாய்களை அமைத்தாக வேண்டும் என்ற இலக்கை அரசு நிர்ணயித்தது.

இதற்காக, 373.87 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதனை விட குறைவாகவே மாநிலத்தில் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 114.58 கோடி ரூபாய் நிதியை மட்டுமே இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு பயன்படுத்தியுள்ளது.

அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். எனவே, 2020-21ஆம் ஆண்டுக்கான நிதி 917.44 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை 100 விழுக்காடு செயல்படுத்துவதற்கு நிதி உட்பட அனைத்து விதமான உதவிகளும் செய்துதரப்படும் என பழனிசாமிக்கு ஷெகாவத் உறுதி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லியில் காற்றின் தரத்தில் கடும் பின்னடைவு!

ABOUT THE AUTHOR

...view details