தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க கோவா விரைந்த மத்திய அமைச்சர் - நிதின் கட்கரி

பனாஜி: கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததையடுத்து, மாநிலத்தின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கோவா விரைந்துள்ளார்.

நிதின் கட்கரி

By

Published : Mar 18, 2019, 8:12 AM IST

கடந்த ஓராண்டாக கணைய புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கா் நேற்று காலமானார்.

அவரது இறப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பாரிக்கரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள கோவா சென்றிருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்காி, மாநிலத்தின் புதிய முதலமைச்சரின் பெயரை அறிவிக்க இருக்கிறார்.

இது குறித்து கட்சி தலைமை நிர்வாகிகளை சந்திக்கும் நிதின் கட்கரி, உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி புதிய முதலமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், அமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு புதிய முதலமைச்சர் குறித்து முடிவு எடுப்போம் எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details