இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற திட்டத்தை அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக, அரசு விளக்கம் அளித்துள்ளது.
அஸ்ஸாம் குழந்தைகள் திட்டத்துக்கு மத்திய அரசு பாராட்டு - அசாம் அரசுக்கு மத்திய அரசு பாராட்டு
டெல்லி: அஸ்ஸாம் குழந்தைகள் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Union health ministry hails Assam's two-child norm
இந்த திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை பாராட்டு தெரிவித்துள்ளது. 1994ஆம் ஆண்டு மக்கள் தொகை மேம்பாடு பிரகடன சர்வதேச மாநாட்டு திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கையை பின்பற்றியுள்ளன என்பது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: அசாம் குடிமக்கள் விவகாரம் - மத்திய அரசுக்கு ஓவைசி சரமாரி கேள்வி!