சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இந்தியாவில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 17 வெளிநாட்டவர்களுக்கும், 56 இந்தியர்களுக்கும் கொரோனா வைரஸ் உள்ளது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று கொரோனா வைரஸிற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின்படி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர் எனக் கூறினார்.
மற்ற மக்களவை உறுப்பினர்களும் தங்களது வாதங்களை வைத்தனர். இதில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, வெளிநாடு சென்றுள்ள புனித யாத்ரிகர்களுக்கு, மாணவர்களுக்கு கொரோனாவிற்காக தொடர்புகொள்ள இந்திய அரசாங்கத்திலிருந்து எதாவது அலைபேசி எண் அளிக்கப்பட்டுள்ளதா எனக் கேட்டார்.
இதையும் படிங்க...கொரோனா எதிரோலி : திரையரங்குகளை மூட டெல்லி அரசு உத்தரவு