தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘அரசியல் விவகாரங்களில் ராணுவ தளபதிகள் தலையிடுகின்றனர்’ - யெச்சூரி காட்டம் - சீதாராம் யெச்சூரி

திருவனந்தபுரம்: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ராணுவ தளபதிகள் அரசியல் விவகாரங்களில் தலையிட்டுவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Sitaram
Sitaram

By

Published : Jan 20, 2020, 12:00 PM IST

காஷ்மீர் இளைஞர்கள் பெருமளவில் பயங்கரவாதத்தை நோக்கிச் செல்வதாகவும் அவர்களை மீட்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் எனவும் முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். இதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.

அப்போது அவர், "பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகாம்கள் இந்தியாவில் ஏற்கனவே உள்ளது. ராணவ தளபதிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் விவகாரங்களில் தலையிட்டுவருகின்றனர். ராணுவ தளபதியின் கருத்து அதிர்ச்சிக்குள்ளாக வைக்கிறது. இதை கூடவா ராணுவ தளபதி அறிந்திருக்க மாட்டார்?" என்றார்.

சீதாராம் யெச்சூரி

இதையும் படிங்க: ‘நாட்டின் தற்போதைய பிரச்னை வேலைவாய்ப்பு, மக்கள்தொகை அல்ல’ - ஒவைசி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details