தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதிய கல்விக் கொள்கை
புதிய கல்விக் கொள்கை

By

Published : Jul 29, 2020, 1:01 PM IST

Updated : Jul 29, 2020, 7:17 PM IST

12:53 July 29

டெல்லி: புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய கல்வி கொள்கைக்கான கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு அளித்த வரைவுக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை வெளியிட இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை 2017ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர்.

இதில் மூன்று வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு 10+2 என்ற கல்வி முறையை 5+3+3+4 என மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை மொழிப்பாடம் மற்றும் கணிதம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்.

ஆறாம் வகுப்பு வரை தாய் மொழி அல்லது உள்ளூர் மொழி கட்டாயம் ஆக்கப்படும். 8ஆம் வகுப்பு அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் விரும்பினால் தாய்மொழியில் படிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மாரிதாஸுக்கு வாய்ப்பூட்டு போட்ட உயர் நீதிமன்றம்!

இந்த வரைவு அறிக்கை மீது ஜூன் 30ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதையொட்டி நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் சர்ச்சைக்குரிய அம்சங்கள்: 

  • பழைய கல்வி முறைகளான குருகுலம், பாடசாலை போன்றவற்றை அறிமுகப்படுத்துவதை முன்வைக்கிறது.
  • குழந்தைகளின் ஆரம்பக் கல்வி 3 வயது முதல் 7 வயது வரை என 5 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • 3, 5, 8ஆம் வகுப்புகளில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தி மாணவர்களின் கற்றல் திறனை கண்டறிதல்.
  • 8ஆம் வகுப்புடன் பொதுக் கல்வியை முடித்துவிட்டு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை எதிர்காலப் படிப்பிற்கான பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும்.
  • அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கும் என்.டி.ஏ (NTA) எனப்படும் அமைப்பு உருவாக்கப்படும். இதன்மூலம் நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • மருத்துவ இளநிலை படிப்பு முடித்தவர்கள் தேசிய அளவிலான எக்ஸிட் தேர்வு எழுதி, அதனடிப்படையில் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • சமஸ்கிருத மொழி ஊக்குவிக்கப்படும்.

சீனாவை மீண்டும் அச்சுறுத்துகிறதா கரோனா?

இதுபோன்ற பல்வேறு அம்சங்களுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஒட்டுமொத்தமாக நமது கல்வி முறையை பின்னோக்கிச் செலுத்தும் கொள்கை, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் செயல் என்று குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் கல்விக்காக தனியார் திறன் வளர்ப்பு மையங்களை நாடச் செய்யும் நிலை ஏற்படும். மூன்று வயதிலேயே மாணவர்களின் கல்வியை தொடங்குவது தேவையில்லாதது என்று சமூக செயற்பாட்டாளார்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Last Updated : Jul 29, 2020, 7:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details