தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேசிய கல்விக் கொள்கை: 2035க்குள் சேர்க்கை விகிதத்தில் 50 விழுக்காடு இலக்கு! - 2035 க்குள் 50 விழுக்காடு மொத்த சேர்க்கை விகிதத்திற்கு இலக்கு

டெல்லி: தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து 2035க்குள் மொத்த சேர்க்கை விகிதத்தில் 50 விழுக்காடு எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 2035 க்குள் 50 விழுக்காடு மொத்த சேர்க்கை விகிதத்திற்கு இலக்கு!
தேசிய கல்வி கொள்கை 2020-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 2035 க்குள் 50 விழுக்காடு மொத்த சேர்க்கை விகிதத்திற்கு இலக்கு!

By

Published : Jul 30, 2020, 8:16 AM IST

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 21ஆம் நூற்றாண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளாக மாற்றப்படாத கல்விக் கொள்கையில் இந்த மாற்றம் முக்கியமாகும். இந்த கல்விக் கொள்கை அனைத்து சமூகத்தினர் மட்டுமின்றி, உலகில் உள்ள கல்வியாளர்களால் வரவேற்கப்படும்” என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய உயர்கல்வி செயலர் அமித் கரே, “இது ஒரு வரலாற்று நாள். 34 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்கு புதிய கல்விக் கொள்கை கிடைத்துள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கை மற்றும் சீர்திருத்தங்களைப் பின்பற்றி 2035க்குள் 50 விழுக்காடு மொத்த சேர்க்கை விகிதத்தை அடைவோம்.

நாட்டில் 45 ஆயிரம் தன்னாட்சி கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளுக்கு கல்வி, நிர்வாகம், நிதி மேலாண்மையை வைத்து தரம் உயர்த்தப்படும். அதுமட்டுமின்றி பிராந்திய மொழிகளில் இணைய தள வகுப்புகள் நடத்தப்படும். விசுவல் லெப், தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (NETF) உருவாகப்படும்” என்றார்.

இதையும் படிங்க...இறுதிக்கட்ட பரிசோதனையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!

ABOUT THE AUTHOR

...view details