இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகள் மசோதா 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அலுவல் மொழி மசோதா 2020 - மத்திய அமைச்சரவை ஒப்புதல்! - பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் டோக்ரி, இந்தி மற்றும் காஷ்மீரி ஆகியவற்றை அதிகாரப்பூர்வமான மொழிகளாக்க வேண்டுமென நீண்டகாலமாகவே பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். நீண்ட நாள்களாக நிலுவை வைக்கப்பட்டிருந்த இந்த கோரிக்கையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குப் பிறகு சமத்துவ மனப்பான்மையைக் கடைப்பிடிப்பதன் அடையாளமாக நடைமுறைப்படுத்த உள்ளோம்.
ஜம்மு - காஷ்மீரில் உருது, காஷ்மீர், டோக்ரி, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும். இது மக்களின் கோரிக்கையின் பேரில் இந்த மசோதா உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்" என அவர் தெரிவித்தார்.