ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாயாவதி மீது அசோக் கெலாட் குற்றச்சாட்டு - ராஜஸ்தான் சட்டப்பேரவைக் கூட்டம்

ஜெய்ப்பூர்: விசாரணை அமைப்புகள் மூலம் பாஜக தரும் அழுத்தத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கட்டுப்பட்டுள்ளார் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Ashok ghelot
Ashok ghelot
author img

By

Published : Jul 31, 2020, 8:53 AM IST

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் மையம் கொண்டுள்ள நிலையில், அங்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அனுமதி வழங்கியுள்ளார். அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து சச்சின் பைலட் தனது அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேருடன் விலகினார்.

இதையடுத்து, அங்கு ஆட்சியை கவிழ்க்கும் வேளையில் பாஜக களமிறங்கியுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ரூ. 35லிருந்து ரூ. 50 லட்சம் வரை பாஜக குதிரை பேரம் பேசப்படுவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

மேலும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குறித்தும் அவர் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அம்மாநிலத்தில் உள்ள 6 பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரஸ் அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என மாயாவதி கொறடா உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

இது குறித்து அசோக் கெலாட், மத்திய பாஜக அரசின் அழுத்தத்திற்கு மாயாவதி அடிபணிந்துள்ளதாகவும், விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றை மத்திய அரசு ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறது. இதுவே மாயாவதியின் இத்தகைய நடவடிக்கைக்கு காரணம் என அசோக் கெலாட் கூறினார்.

இதையும் படிங்க:ராம ஜென்ம பூமி கோயிலா அல்லது புதிய ராமர் கோயிலா?

ABOUT THE AUTHOR

...view details