தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 20, 2020, 4:58 PM IST

ETV Bharat / bharat

'காங்கிரஸ் கட்சியை வரவேற்க வேண்டும்' - ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்!

ஜெய்ப்பூர்: குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, பேருந்து வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய்துகொடுத்த காங்கிரஸ் கட்சியை, அனைத்து அரசாங்கமும் வரவேற்க வேண்டும் என ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்
ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்

உத்தரப்பிரதேச அரசு, ராஜஸ்தானில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வந்த பேருந்துகளை உத்தரப் பிரதேச எல்லைக்குள் செல்ல அனுமதியளிக்காத காரணத்தால், பல பேருந்துகள் ராஜஸ்தான் - உத்தரப்பிரதேச எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்துகள் குடிபெயர்ந்தோருடன் வந்திருப்பதால், மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்காததற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் அபிஷேக் மனு சிங்வி, உத்தரப்பிரதேச அரசாங்கத்தைக் கண்டித்தார். மேலும், உத்தரப்பிரதேச அரசின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இதில் அரசியல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து ராஜஸ்தான் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறியதாவது, "காங்கிரஸ் கட்சி மக்களுக்கு உணவு, பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்த செயலுக்கு, ஒவ்வொரு அரசாங்கமும் வரவேற்க வேண்டும். எல்லைகளில் அனுமதி வழங்காதது, தலைவர்களைக் கைது செய்வது, குட்டி அரசியல் செய்வது போன்றவை நியாயமானது அல்ல. ராஜஸ்தானில் இருந்து குடிபெயர்ந்தோரை ஏற்றி வந்த பேருந்துகளை, உத்தரப் பிரதேச எல்லைக்குள் அனுமதிக்காதது தவறானது" என்றார்.

இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவந்த பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!

ABOUT THE AUTHOR

...view details