கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நடந்த மோதல் காரணமாக, எல்லையில் அசாதாரணமான சூழல் நிலவிவருகிறது. அதுகுறித்து பாஜக அரசு தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளுடன் பேசிவருகிறது.
இந்நிலையில் அக்கூட்டத்திற்கு ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை அழைக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா புகார் தெரிவித்திருக்கிறார்.
"பிகாரில் 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள தனிப்பெரும் கட்சியாகயிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்படாதது துரதிர்ஷ்டவசமாகும்.
பிகாரைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் உயிரிழந்துள்ளனர். எங்களுக்கு அதைப் பற்றி அரசிடம் கேட்பதற்கு கேள்விகள் இருக்கின்றன. மேலும், இந்த மோதலைத் தொடர்ந்து இந்தியா எடுக்கப்போகும் அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அங்கு இருக்க வேண்டும்'' என மனோஜ் குமார் ஜா கூறினார்.
இதையும் படிங்க:52 சீன செயலிகள் முடக்கப்படும் - இந்திய புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை!