தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கு தளர்விலும் மாறாத வேலையின்மை விகிதம்! - வர்த்தக செய்திகள்

டெல்லி: கடந்த ஏப்ரல் மாதம் இருந்த வேலையின்மை விகிதத்தை ஒப்பீடும்போது, இம்மாத வேலையின்மை விகிதத்திற்கு பெரியளவில் வித்தியாசமில்லை.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 24 விழுக்காடு: சிஎம்ஐஇ
இந்தியாவில் வேலையின்மை விகிதம் 24 விழுக்காடு: சிஎம்ஐஇ

By

Published : May 21, 2020, 11:39 AM IST

கரோனாவால் விதிக்கப்பட்ட ஊரடங்கு நகர்புற, கிராமப்புற வேலைவாய்ப்பினை பாரபட்சமின்றி வீழ்ச்சியடைய செய்தது. இதனால் வேலையின்மை அதிகரித்தது. தற்போது ஊரடங்கு தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதத்தை அதிகரித்தாலும், வேலையின்மையில் மாற்றமில்லை.

வேலையில்லா திண்டாட்டம் குறையுமா?

ஏப்ரல் 26ஆம் தேதி கணக்கின்படி தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 35.4 விழுக்காடாக இருந்தது. அதுவே மே 3ஆம் தேதி 36.2 விழுக்காடாக உயர்ந்தது. மே 10ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் 37.6 விழுக்காடாக உயர்ந்தது.

தற்போது, இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE)வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஊரடங்கு தளர்வு பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மே 17ஆம் தேதி தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 38.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் வேலையின்மை விகதம் 24 விழுக்காடாகயிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இருந்த வேலையின்மை விகிதத்தை ஒப்பிடும்போது, இம்மாத வேலையின்மை விகிதத்திற்கு பெரியளவில் வித்தியாசமில்லை.

கிராமப்புறங்களில் வேளாண்மை உள்ளிட்ட தொழில்கள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதால் கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. மே 3ஆம் தேதி 26.16 விழுக்காடாக இருந்த கிராமப்புற வேலையின்மை விகிதம், மே 10ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில் 22.35 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதே காலத்தில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் 29.22 விழுக்காட்டிலிருந்து 27.83 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது.

கிராமப் புறத்தில் வேலையில் ஈடுபவர்களையும், நகர்புறத்தில் வேலை செய்பவர்களையும் ஒப்பிடும்போது நகர்புற விகிதம் 27 விழுக்காட்டையும், கிராமம் 23 விழுக்காட்டையும் கொண்டுள்ளது. ஆனால் நகர்புறத் தொழிலாளர் பங்களிப்பு வீதத்தைக் கணக்கீடும்போது 34 விழுக்காடாகவும், அதுவே கிராமப் புறத்தில் 41 விழுக்காடாகவும் உள்ளன. இதற்கு நகர்புறம் திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதே காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

குறிப்பாக, சொந்த கிராமங்களில் வேலை வழங்கும் வகையில் மகாத்மா ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி வழங்கப்படும் என்பதை கிராமப் புற தொழிலாளிகளுக்கு சாதகமாக சுட்டிக்காட்டுகிறது சிஎம்ஐஇ.

முன்னதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பு சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கரோனாவால் ஏற்படும் வேலையிழப்புகள் 2.47 கோடி வரையில் இருக்கும் எனவும், கரோனாவால் வேலையின்மை அதிகரித்து, உலக அளவில் வறுமையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஹூவாய் மீதான தடை, ஹூவாய் இந்தியாவுக்கும் பொருந்தும்' - அமெரிக்கா அதிரடி

ABOUT THE AUTHOR

...view details