நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவோம் என அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் வேலையின்மை அளிக்கப்படும் என ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாட்டின் பெரிய வணிக நிறுவனங்கள் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன. மாநிலத்தில் வேலையின்மையை முடிவுக்கு கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டன. வேலைவாய்ப்புகள் குறித்து இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்கவே இன்று மாநாடு நடத்தப்பட்டது.
அரசு ரீதியாக வேலைவாய்ப்புக்கு என கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் வேலையின்மை ஒழிக்கப்படும்" என்றார்.