காலாரங் சன்குருதிக் காலா சாந்தா சார்பில் விருது வழங்கும் விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் நானா படேகர் கலந்துகொண்டார். அப்போது அவர், நிழல் உலக தாதாவான மன்யா சுர்வே தனது நெருங்கிய நண்பர் என்று கூறினார். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கில் தன்னை தனது தாய் கொங்கன் பகுதிக்கு சிறு வயதில் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.
‘நிழல் உலக தாதா எனது நெருங்கிய உறவினர்’ - நானா படேகர் - நிழல் உலக தாதா மன்யா சுர்வே
மும்பை: நிழல் உலக தாதாவான மன்யா சுர்வே தனது நெருங்கிய உறவினர் என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nana Patekar
பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி நிழல் உலக தாதாவாகத் திகழும் மன்யா சுர்வேவை தனது உறவினர் என நானா படேகர் திடீரென தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நானா படேகர்
இதையும் படிங்க: ரோஜாவின் திருஷ்டி பொம்மையா பாலகிருஷ்ணா: ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து