தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்... தனது கருத்துக்கு மன்னிப்பு கோரிய சாம் பிட்ரோடா! - Apology

டெல்லி: சீக்கியர் கலவரம் தொடர்பாக நான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் சாம் பிட்ரோடா மன்னிப்புக் கோரியுள்ளார்.

சாம் பிர்ரோடா

By

Published : May 11, 2019, 8:14 AM IST

Updated : May 11, 2019, 11:49 AM IST

மே 9ஆம் தேதி இமாச்சலப்பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் பற்றிய கேள்விக்கு, " நடந்தது, நடந்து விட்டது! என்ன செய்வது?" என தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, "இந்த கருத்து காங்கிரசின் மன நிலையையும், உணர்ச்சியற்ற தன்மையையும் காட்டுகிறது" என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "1984இல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம் கொடூரமானது. இந்தக் கலவரத்தை பற்றி சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்து தவறானது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் பற்றி பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் சாம் பிட்ரோடா, "இந்தியில் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. சீக்கியர் கலவர சம்பவத்தை கடந்து செல்ல வேண்டும் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் நான் நினைத்த கருத்தை என்னால் சரியாக தெரிவிக்க முடியவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Last Updated : May 11, 2019, 11:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details