தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமெரிக்காவில் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்! - அமெரிக்காவில் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்

டெல்லி: அமெரிக்காவில் பெருமளவு இந்தியர்கள் பயன்பெறும் ஹெச்.1 பி நுழைவுச் சீட்டுகளில், 'நிச்சயமற்ற தன்மை' நிலவுவதாக அமெரிக்க- இந்தியக் கூட்டுப் பங்காண்மை திட்டத்தின் தலைவரும், தலைமைச் செயல் அலுவலருமான டாக்டர் முகேஷ் ஆஹி எச்சரித்துள்ளார்.

Smita Sharma  H1B visa  US- India Strategic Partnership  India lockdown  அமெரிக்காவில் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம்  ஹெச்1 நுழைவுச் சீட்டு, அமெரிக்காவில் கரோனா பாதிப்பு, வியட்நாம் போர், அமெரிக்க- இந்திய கூட்டுபங்காண்மை திட்டத்தின் தலைவர் முகேஷ் ஆஹி
Smita Sharma H1B visa US- India Strategic Partnership India lockdown அமெரிக்காவில் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஹெச்1 நுழைவுச் சீட்டு, அமெரிக்காவில் கரோனா பாதிப்பு, வியட்நாம் போர், அமெரிக்க- இந்திய கூட்டுபங்காண்மை திட்டத்தின் தலைவர் முகேஷ் ஆஹி

By

Published : May 5, 2020, 1:50 PM IST

அமெரிக்க - இந்திய கூட்டுப்பங்காண்மை திட்டத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான டாக்டர் முகேஷ் ஆஹியை, ஈடிவி பாரத் மூத்தத் செய்தியாளர் ஸ்மிதா சர்மா பிரத்யேகமாக பேட்டி கண்டார்.

அப்போது ஆஹி, “இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால், வாழ்வாதாரங்களை காப்பாற்றவும் பொருளாதாரத்தைப் புதுப்பிக்கவும் இதை எளிதாக்குவதற்கான நேரம் இது” என்று கூறினார். நியூயார்க்கில் இருந்து மூத்தப் பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவிடம் பேசிய டாக்டர் ஆஹி தொடர்ந்து கூறுகையில், “அமெரிக்காவில் வியட்நாம் போரைவிட கரோனா வைரஸால் அதிக இறப்புகள் ஏற்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், உலகளாவிய பொருளாதாரங்கள் கடுமையாக சுருங்கிவருவதால், இந்தியா ஒரு பெரிய நிதி ஊக்கம் அளிப்பதில் முன்னேற வேண்டும். அமெரிக்கா செய்வது போல தேவையான நிதி தொகுப்பு கொடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் முக்கியமானது.

ஆனால், நாட்டில் உள்ள 1.3 பில்லியன் மக்களுடன் ஒப்பிடும்போது, இந்தப் பாதிப்பு எண்ணிக்கை குறைவானதுதான். மிக முக்கியமானது என்னவென்றால், நீங்கள் எவ்வாறு மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறீர்கள் என்பதுதான். அமெரிக்காவின் எங்கள் அனுபவம் என்னவென்றால், கடைசி காலாண்டு சரிந்தது.

ஊக்குவிப்பு தொகை டிரில்லியன் கணக்கான டாலர்களாக இருக்கும்போது, 4.8 விழுக்காடாக சுருங்கியது. இந்தியாவில் ஊக்குவிப்பைப் பார்க்கும்போது, இது மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். பொருளாதாரத்தை எளிதாக்கவும் மீட்டெடுக்கவும் அளவீடு செய்யப்படும்போது, குடிமக்கள், வணிக சமூகத்தின் நம்பிக்கையை வளர்க்கும் ஒரு ஊக்க தொகுப்பு அறிவிக்கப்படுவது மிகவும் முக்கியமானது.

வணிக கொள்கை வகுப்பு, தொழிலாளர் சீர்திருத்தம்

ஆனால் குறு, சிறு நிறுவனங்கள் மற்றும் சிறு சில்லறை கடை வியாபாரிகள் மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம். அவர்கள் வீழ்ச்சியடையத் தொடங்கினால், அடுத்த ஆறு அல்லது 12 மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது கடினம். மேலும், வணிக கொள்கையை வகுப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழிலாளர் சீர்திருத்தம் ஆகியவையும் அவசியம்” என்று குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கு திடீரென இவ்வளவு கடுமையான ஊரடங்கு தேவைதானா, இது இன்னும் எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்று ஸ்மிதா சர்மா கேட்டதற்கு, 'பிரதமர் மோடி மிகச் சிறந்த வேலையைச் செய்தார். அதிகாரத்துவம் முடுக்கிவிடப்பட்டு, அவரது அழைப்புக்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் ஓன்றாக கிடைத்தது. இதுதொடர வேண்டும்” என்று பதிலளித்தார்.

இந்தியாவுக்கு திடீரென் இவ்வளவு கடுமையான ஊரடங்கு தேவைதானா?

மேலும், “இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது நேர்மறையான முடிவுகளைக் காட்டியுள்ளது. ஆனால், இப்போது தளர்வுகள் தொடங்கப்பட வேண்டும். இந்தியா 60 விழுக்காடு நுகர்வு அடிப்படையிலான பொருளாதாரம் என்பதால், தொடர்ந்து முழு அடைப்பு (Lock down) பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிவிடும்.

செலவாகுவதை நிறுத்தினால் பொருளாதாரம் முற்றிலும் குறைந்துவிடும். எனவே நீங்கள் மெதுவாக தளர்த்தத் தொடங்க வேண்டும். ஊரடங்கை பொருத்தவரை அமெரிக்கா மிக மோசமான வேலையை செய்தது. நம்மால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும். வியட்நாம் போரை விட, கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா அதிக இறப்புகளைச் சந்தித்துள்ளது.

எனவே இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஊரடங்கை பொருத்தவரை அமெரிக்கா எஃப்-கிரேடு அட்டையைப் பெறும். இந்தியா நல்ல வேலையைச் செய்துள்ளது. அத்தியாவசியத் தேவைக்கு அதிகமான பொருட்கள் கிடைப்பது சாதகமான அறிகுறியாகும். அடுத்தாண்டு முதல் நான்கு வாரங்களில் இந்தியா கணிசமான பணிகளைத் தொடங்கிவிடும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த தொற்று நோய்க்கு சீனாவைப் பொறுப்பேற்க வைக்கலாமா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் ஆஹி , “அமெரிக்காவின் மிசௌரி மாநிலம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது. இது உலகளாவிய சமூகம் பெய்ஜிங்கை பொறுப்பேற்க வைக்கும் முயற்சி.

ஆனால் இந்த நெருக்கடியை சாதகமாகப் பயன்படுத்தவும், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் முன்னேறவும் இந்தியா தனது செயலை ஒன்றிணைக்க வேண்டும். இந்தியா அதன் கொள்கை வகுப்பதில் வெளிப்படையானதாகவும், கணிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். இது சந்தைக்கு அணுகலை மட்டுமல்லாமல் சமநிலையான ஆடுகளத்தையும் வழங்க உள்ளது.

வால்மார்ட் உள்ளே வந்து பிளிப்கார்ட்டை வாங்கியபோது என்ன நடந்தது? இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர்கள் கொள்கையை மாற்றினர். ஆந்திராவில் ஆட்சி மாறியபோது என்ன நடந்தது? அவர்கள் எல்லா ஒப்பந்தங்களையும் முற்றிலும் மாற்றினர். ஒப்பந்த நம்பகத்தன்மை இருக்க வேண்டும்.

கார்ப்பரேட் வரியைக் குறைக்கும் முயற்சியில் இந்தியா ஒரு பெரிய வேலையைச் செய்துள்ளது. வரி கண்ணோட்டத்தில் குறைந்த விகிதத்துடன் உற்பத்தியாளர்கள் வருகின்றனர். ஆனால் தொழிலாளர் சீர்திருத்தங்கள், நில சீர்திருத்தங்களைக் கவனிக்க வேண்டும். வியட்நாம், கம்போடியா மற்றும் பிற நாடுகளுடன் போட்டியிடப் போவதாக இருந்தால், இவை அனைத்தையும் நாங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம்.

இதன்மூலம் மேலும் முன்னோக்கிச் செல்லும் உணர்வு இருப்பதை உறுதிசெய்கிறோம்' என்றார். தொடர்ந்து பேசிய அவர் இந்தியா சந்தித்துவரும் வேலையில்லாத திண்டாட்டங்களையும் அவர் சுட்டிக் காட்டினார். வேலைவாய்ப்பை அதிகரிப்பது ஒரு பெரியக் கவலையாக உள்ளதையும் அவர் நினைவுப்படுத்தினார்.

இது குறித்த அவர் பேசுகையில், “அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் 26 மில்லியன் மக்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டடுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் நம்பமுடியாத அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா பூஜ்ஜிய வேலையின்மை நிலையில் இருந்தது.

எனவே இது ஒரு பெரிய கவலை. வணிகர்கள் மற்றும் நுகர்வோர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது. கடைகள் மூடப்பட்டிருப்பதால் வணிகங்கள் தங்கள் பொருட்களை வெளியேற்ற முடியாமல் பூட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் புத்துயிர் பெற மிகப்பெரிய முயற்சி தேவைப்படும்.
2021ஆம் ஆண்டை புத்துயிர் பெற்ற ஆண்டாக நீங்கள் பார்க்க மாட்டீர்கள். அதற்கு, 2022 வரை அல்லது அதற்கு மேலும் ஆக வாய்ப்புள்ளது. எனவே, பொருளாதாரத்தை 4.5 விழுக்காட்டுக்கு மேல் கொண்டுசெல்ல இந்தியா ஏற்கனவே போராடியதைப் பார்க்கும்போது, ஊரடங்கு வியத்தகுத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரிய ஊக்குவிப்பு தொகுப்பு தேவைப்படும், ஆனால் அதைவிட மிக முக்கியமாக, அந்நிய நேரடி முதலீட்டை நாட்டிற்குள் கொண்டுவருவது, முதலீடு செய்து வேலைகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்த அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் குறைந்தது 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை உருவாக்க வேண்டும்” என்றார்.

ஹெச்.1 பி நுழைவுச் சீட்டு சவால்

ஹெச்.1 பி நுழைவுச் சீட்டு (விசா) வைத்திருப்பவர்களுக்குப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் குறித்து கேட்டதற்கு, “இந்தப் பிரச்சினை முக்கியமானது. கிரீன் கார்டுக்காகக் காத்திருப்பவர்களுக்கு இது ஒரு சவால்” என்றார். மேலும், ஹெச்1பி நுழைவுச் சீட்டு விவகாரம் முக்கியமானதாகும்.

இந்த நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள், வேலையிழந்தால் அடுத்த 60 நாள்களுக்குள் புது வேலையைப் பெற்றாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இன்று, இரண்டரை லட்சம் மக்கள் ஹைச்.1 பி நுழைவுச் சீட்டு வைத்துள்ளனர்.

அவர்களுக்கு வேலை கிடைப்பது சவாலாகியுள்ளது. மிக முக்கியமா எட்டு லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கின்றனர். அதிபரின் ஆணையால் அதுவும் குறைந்தது 60 நாள்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. அதுவும் சவாலாக உள்ளது. இதன் தாக்கமும், மத்திய கிழக்கில் நடப்பதன் தாக்கமும், இந்தியாவில் பணம் அனுப்புவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

கச்சா எண்ணெய் குறித்த கேள்விக்கு, “அண்மையில் எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. இந்த நேரத்தில் மற்றொரு வகையிலும் இது மகிழ்ச்சியான விஷயம். குறைந்த எண்ணெய் விலை இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி. பீப்பாய் விலையில் அதிகரிக்கும் ஒவ்வொரு டாலரும் இந்தியாவின் அந்நியச் செலாவணியில் ஒரு மில்லியன் டாலர்களின் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று.

கச்சா எண்ணெய் வீழ்ச்சி

எனவே இந்த நேரத்தில் இது ஒரு ஆசீர்வாதமாகும். இது பொருளாதாரத்தைப் புதுப்பிக்க உதவும்” என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அமெரிக்க- இந்தியக் கூட்டுப் பங்காண்மை திட்டத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான டாக்டர் முகேஷ் ஆஹி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோவிட்-19 வெளிப்படைதன்மைக்கு எஸ்டோனியா அழுத்தம் கொடுக்கும்!

ABOUT THE AUTHOR

...view details