தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என்பதை ஐநா அறிக்கை நிரூபணமாகிவிட்டது - இந்தியா - வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் பாகிஸ்தான் பயங்கரவாத்தின் மைப்புள்ளியென ஐநா அறிக்கை

டெல்லி : சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் எனும் இந்தியாவின் நீண்ட கால நிலைபாட்டை, ஐநா அறிக்கை நிரூபணமாக்கியுள்ளது என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

MEA global terrorism
MEA global terrorism

By

Published : Jun 3, 2020, 6:03 PM IST

Updated : Jun 7, 2020, 7:47 AM IST

ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் 'Analytical Support and Sanctions Monitoring Team' என்ற குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றை சமீபத்தில் சமர்ப்பித்தது.

அதில், "பாகிஸ்தானை தலைமையகமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகள் ஆப்கானிஸ்தானுக்குள் பயங்கரவாதிகளை அனுப்பி வருகின்றன. இது ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புவதை அபாயத்தில் தள்ளியுள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜுன்- 2ஆம் தேதி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, "பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைபாட்டை இந்த அறிக்கை நிரூபணமாக்கியுள்ளது. பயங்கரவாத குழுக்கள் என அறிவிக்கப்பட்ட பல அமைப்புகளுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் தந்துவருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க : காபூல் மசூதியில் குண்டுவெடிப்பு!

Last Updated : Jun 7, 2020, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details