தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றவுள்ள மோடி - ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில்

ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சிலில் ஜூலை 17ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Jul 16, 2020, 1:22 AM IST

ஐநாவின் மிக முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருப்பது ஐநா பாதுகாப்பு கவுன்சில். உலக அமைதி, பாதுகாப்பு ஆகியவற்றை நிலைநாட்டுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.

கவுன்சிலில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை நிராகரிக்கும் அளவுக்கு இந்த நாடுகளுக்குப் பிரத்யேகமான அதிகாரம் உண்டு. இதையடுத்து, ஜெர்மனி, பெல்ஜியம், போலாந்து உள்ளிட்ட 10 தற்காலிக உறுப்பு நாடுகள் உள்ளன. 2021-22ஆம் ஆண்டுகளுக்கான தற்காலிக உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல்முறையாக பிரதமர் மோடி ஐநாவில் உரை நிகழ்த்தவுள்ளார். ஐநாவின் 75ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் ஜூலை 17ஆம் தேதி நியூயார்க் நகரில் கூடவுள்ளது. இதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் மோடி உரையாற்றவுள்ளார்.

நார்வே பிரதமர் எர்னா சோல்பர்க், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஆகியோரும் இதில் உரையாற்றவுள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில், அரசு, தனியார் துறை, அரசு சாரா அமைப்பு ஆகியவற்றின் உயர் மட்ட பிரதிநிதிகள், கல்வியாளர்கள் ஆகியோர் பங்கேற்பார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சிலின் முதல் கூட்டம் ஜனவரி 23ஆம் தேதி, 1946ஆம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்றது. அதன் முதல் தலைவர் ராமசாமி முதலியார் என்பது குறிப்பிடத்தக்கது.

'கரோனாவுக்கு பிறகான காலத்தில் பல தரப்பு உறவுகள்: 75ஆவது விழாவில் எம்மாதிரியான ஐநா தேவை' என்ற தலைப்பு ஆய்வு பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992, 2011-2012 ஆகிய காலகட்டங்களில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பு நாடாக இந்தியா இருந்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய-ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details