குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பிப்ரவரி மாதம் டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவத்தைத் தூண்டியதாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் காலித், ஜாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் மீது டெல்லி காவல் துறை உபா சட்டத்தின்கீழ் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜாமியா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுவின் ஊடகத் தொடர்பாளர் சஃபூரா சர்கார், அதன் உறுப்பினர் மீரான் ஹைதர் ஆகியோர் டெல்லி காவல் துறையினரால் நடப்பு மாதத்தின் தொடக்கத்தில் கைதுசெய்யப்பட்டனர். உமர் காலித் தற்போதுவரை கைதுசெய்யப்படவில்லை.