கரோனா தொற்றைக் கருத்தில்கொண்டு நவம்பர் 30ஆம் தேதி கார்த்திக் பூர்ணிமா தினத்தையொட்டி, கங்கை நதியில் மக்கள் புனித நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் சி. ரவிசங்கர் கூறுகையில், "டெல்லி, ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கைக் கரையில் ஒன்றுகூடி வருகின்றனர்.
இருப்பினும், கரோனாவைக் கருத்தில்கொண்டு மையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, இந்த ஆண்டு கார்த்திக் பூர்ணிமாவில் ஆற்றில் குளிப்பதைத் தடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
ஏனெனில் இது தொற்றுப் பரவுவதற்கு காரணமாக இருக்கும். மேலும் உத்தரவுகளை மீறுபவர்களுக்கு தொற்றுநோச் சட்டம் 1897 மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 ஆகியவற்றின்கீழ் தண்டிக்கப்படுவர்" என்று கூறினார்.
இதையும் படிங்க:கங்கை நதியில் உள்ள பாக்டீரியோபேஜ்கள் கரோனாவை அழிக்குமா... 5 பேராசிரியர்கள் ஆய்வு!