டெல்லி: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் கார்ன்வால் நகரில் ஜூன் மாதம் 11ஆம் தேதி முதல் 14வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. வளர்ந்த பொருளாதாரங்கள் கொண்ட பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் கொண்ட ஜி7 மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜி7 மாநாட்டில் கரோனா தொற்று, பருவநிலை மாற்றம், திறந்த வர்த்தகம் போன்ற உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.