இதுதொடர்பாக யுஜிசி செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறியதாவது: 'சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அது சரிசெய்யப்பட்டு நிலுவைத் தொகையுடன், தற்போது வரை உள்ள தொகைகள் அனைத்தும் இன்னும் ஒரு வார காலத்தில் இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
நிலுவையிலிருந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை - யுஜிசி விடுவிப்பு! - ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகை
டெல்லி: இளநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கான நிலுவை உதவித்தொகை ஒரு வார காலத்துக்குள் வழங்கப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

பல்கலைக் கழக மானியக் குழு
இளநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ. 31 ஆயிரம், முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.28 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி-தேசிய தகுதி தேர்வு (நெட்) எழுதியவர்களில் 51 ஆயிரம் மாணவர்கள் உதவி பேராசியர்களாக தகுதி பெற்றனர். இவர்களில் 4 ஆயிரத்து 756 மாணவர்கள் இளநிலை ஆராய்ச்சி மாணவர்களாக தகுதி பெற்றனர்.
இதையும் படிங்க: 'மருத்துவப்படிப்பிற்கான 10% உள்ஒதுக்கீட்டுக்கு சட்டப்போராட்டம் நடத்துவோம்' - புதுச்சேரி முதலமைச்சர்