தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறுதியாண்டு தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்ட யுஜிசி

டெல்லி: பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து, தேர்வுகள் நடத்துவதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

ugc-issues-revised-guidelines-for-conduct-of-exams
ugc-issues-revised-guidelines-for-conduct-of-exams

By

Published : Jul 7, 2020, 12:31 PM IST

நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மாணவர்களின் நலன்கருதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாட்டில் பல அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகள் கரோனா வைரஸ் சிறப்பு முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக, கல்லூரிகளின் தேர்வுகளையும் ரத்துசெய்ய வேண்டும் என்ற தொடர் கோரிக்கை எழுந்துவந்தது.

இதனைக் கருத்தில்கொண்ட மத்திய அரசு, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ரத்துசெய்து உத்தரவிட்டது. ஆயினும், இறுதியாண்டு மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவந்தது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 6) பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிக்காட்டுதல்படி இறுதியாண்டு பருவத்தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் கட்டாயம் நடத்த வேண்டும் என மத்திய உயர் கல்வித் துறை செயலருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் இறுதியாண்டுத் தேர்வுகளை ரத்துசெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கரோனா வைரசின் பரவலைக் கருத்தில்கொண்டு ஆன்லைன் மூலமாகவோ, கல்லூரிகளிலோ தேர்வுகளை நடத்தலாம் என நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஏற்று பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட பருவத்தேர்வுகளின் வழிகாட்டுதல்களின் தொடர்ச்சியாக, நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளன.

இந்த இக்கட்டான சூழலில் சுகாதாரம், பாதுகாப்பு, மாணவர்களுக்கான சம வாய்ப்பு ஆகியவை முக்கியம் என்றபோதிலும், கல்வி நிலையங்கள் மீதான நம்பகத்தன்மை, தொழில் வாய்ப்புகள், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதும் மிக முக்கியம்.

எனவே, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாணவர்களுக்கான இறுதியாண்டு பருவத்தேர்வுகளை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்திமுடிக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால், யுஜிசி சார்பாக, உயர்கல்வி நிறுவனங்களுக்கு, மாணவர் சேர்க்கை, அந்தக் கல்வியாண்டிற்கான நாள்காட்டி உள்ளிட்டவை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details