மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைத்து 100 நாள்களைக் கடந்துள்ள நிலையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அயோத்தி சென்று ராமரை தரிசிக்கிறார்.
தாக்கரேவின் இந்தப் பயணம் குறித்து அக்கட்சியின் மூத்தத் தலைவரும், சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் கூறியிருந்தார். அப்போது தங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கும் அவர் அழைப்புவிடுத்திருந்தார்.
உத்தவ் தாக்கரே நேற்று டெல்லியில் தனது மகனுடன் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளுக்கு காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் இச்சட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:இந்தியாவின் மதிப்பு உயர்ந்தால் காங்கிரசுக்கு அது பிடிப்பதில்லை - பாஜக