சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், "சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உள்ளது.
மகாராஷ்டிராவில் அமையவுள்ள அரசுக்கு உத்தவ் தாக்கரே தலைமை வகிப்பார். மற்ற விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது. மூன்று கட்சிகளும் சேர்ந்து நாளை செய்தியாளர் சந்திப்பு நடத்தவுள்ளது. உத்தவ் தாக்கரேவை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதில் ஒருமித்த கருத்த எட்டப்பட்டுள்ளது" என்றார்.