கேரள மாநிலம், கோழிக்கோட்டில் கடந்தாண்டு நவம்பர் மாதம் மாவோயிஸ்ட்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆலன் சுகெயிப், தாஹா பாஷல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதனால் ஆலன் சுகெயிப், தாஹா பாஷல் ஆகிய இருவர் மீது உபா வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இவர்கள் இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கக்கோரி, தேசிய பாதுகாப்பு முகமைத் தொடர்ந்த வழக்கு என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.