புதுச்சேரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ச்சியாக பெய்யும் மழையினால், ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவருகிறது. இதனால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இதனால், சாரங்கபாணி ஆற்றில் நீரின் அளவு அதிகமாகி வெள்ளம் கரைபுரண்டு ஒடியுள்ளது. அப்போது, புதுப்பேட்டையைச் சேர்ந்த வினோத் (22), அவரது நண்பர் கார்த்திக் (21) ஆகிய இருவரும் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தனர்.