காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியான கில்ஜித்தில் இரண்டு இளைஞர்கள் உளவு பார்த்துவருவதாக, இந்திய உளவுத்துறை தெரிவித்தது. இதையடுத்து கில்ஜித் மாவட்ட காவல்துறையினர் நடத்திய சோதனையில், காஷ்மீரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லைப் பகுதியில் உளவு பார்த்த இருவர் கைது! - எல்லைப் பகுதியில் உளவு பார்த்த இருவர்
ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளை உளவு பார்த்ததாக இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
two-youth-arrested-for-spying-family-in-shock-police-verifying-facts
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்களது பெயர் நூர் முகம்மது வாணி, ஃபெரோஸ் அகமது லோன் என்பதும், அவர்கள் இருவரும் பந்திபோரா மாவட்டத்தில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதில் ஃபெரோஸ் அகமது லோன் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அவரது குடும்பத்தினர் வடக்கு காஷ்மீர் பகுதியான குரோஸ்ஸில் வசித்துவருகின்றனர். இதையடுத்து, காவல்துறையினர் இரண்டு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தகவலளித்துள்ளனர்.