புதுச்சேரியை அடுத்த திருபுவனை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செங்கேணி(60), விஜயா(55). இவர்கள் திருபுவனை பகுதியில் உள்ள தோப்பிற்கு கீரை பறிப்பதற்காக சென்றுள்ளனா். அப்போது அங்கு அறுந்து கிடந்த, மின்கம்பியை இருவரும் மிதித்தால் தூக்கி வீசபட்டு இறந்து போனார்கள். இது குறித்து தகவல் அறிந்தவுடன் திருபுவனை காவல் துறையினா், மின்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மின்சாரம் தாக்கியதில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு - two women died
புதுச்சேரி: கீரை பறிக்கச் சென்ற இரண்டு பெண்கள், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரம் தாக்கி பலி
இந்த சம்பவம் குறித்து திருபுவனை காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.