கர்நாடக மாநிலம் நஜராபூர் பகுதியில் உள்ள உறவினரின் திருமணத்திற்காக ஹைதராபாத்திலிருந்து அப்துல் ரஹீம், அட்னான் ஆகியோர் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள தாபா தாபி நீர்வீழ்ச்சியைக் காண்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது, அவர்கள் செல்ஃபி எடுக்கும்போது நிலைதடுமாறி தண்ணீரில் விழுந்துள்ளனர். இதில், இரண்டு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் இம்மாதத்தில் இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.