மேற்கு வங்க மாநிலம், சவுத் 24 பிராக்னாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவ திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி அமீர் அலி கான். 56 வயதான இவர், பசாந்தி என்ற பகுதியில் நேற்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். அதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனிடையே, புர்துவான் மாவட்டம் லகிபூர் என்ற பகுதியில் இருவேறு பிரிவினருக்கு இடையே நடந்த மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் கவுதம் தாஸ் அடித்துக் கொல்லப்பட்டார்.