ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்தனர். இதனிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனையை தொடர்ந்து மேற்கொண்டனர்.
இந்நிலையில், சோபியான் மாவட்டம் மேல்ஹோரா பகுதியில் பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு படையினுருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.