தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வாகமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறையிடமிருந்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் இன்று (ஜூன் 30) காலை அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.