பெங்களூரு (கர்நாடகம்): என்.ஐ.ஏ அலுவலர்கள் நகரத்தில் நடத்திய அதிரடி சோதனையில், பயங்கரவாத கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமையின் டெல்லி அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அதில், இருவரை கைதுசெய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.