ராஜஸ்தான் மாநிலம், காஜ் சிங்கப்பூர் அருகே உள்ள இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக நேற்றிரவும், இன்று காலையும் இருவர், இந்திய எல்லைப் பகுதியான கியாலிவாலா அருகே, இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றனர்.
இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தானிகள் சுட்டுக்கொலை! - இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஊடுறுவல்
ஜெய்ப்பூர் : இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் இருவர் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
two-suspected-intruders-shot-dead-by-bsf-at-indo-pak-border-in-rajasthan
தொடர்ந்து, எல்லையில் உள்ள வேலிப் பகுதியில் அவர்கள் பதுங்க முயன்றபோது எல்லைக் காவல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர். இருப்பினும், அவர்கள் எல்லையைக் கடக்க முயன்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இருவரும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ள நிலையில், அவர்களிடமிருந்த ஆயுதங்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.