தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டார்லிங் சிவப்பு பாண்டாக்கள் ஜெர்மனிக்கு பயணம் - டார்ஜிலிங் பூங்கா சிவப்பு பாண்டா

கொல்கத்தா: டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு சிவப்பு பாண்டாக்கள் இனப்பெருக்கத்திற்காக ஜெர்மனிக்கு அனுப்பப்படுகின்றன.

RED PANDA
RED PANDA

By

Published : Feb 23, 2020, 2:49 PM IST

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் உயிரியல் பூங்காவில் ஜுவல்; ஷாஹீன் என இரண்டு சிவப்பு பாண்டாக்கள் இருக்கின்றன.

இந்நிலையில், இந்த இரண்டு பாண்டாக்களையும் இனப்பெருக்கத்திற்காக ஜெர்மனிக்கு அனுப்ப வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று அந்த விலங்குகளை டார்ஜிலிங் உயிரியல் பூங்காவிலிருந்து வெளியேற்றி அலுவலர்கள், அவற்றை கொல்கத்தாவுக்கு அனுப்பியுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் இந்த இரண்டு பாண்டாக்களும் விமானம் மூலம் ஜெர்மனிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், மார்ச் 6ஆம் தேதி வரை, ஜெர்மனியில் உள்ள டையர்பார்க் பூங்காவில் காட்சிப்படுத்தப்படும்.

சிவப்பு பாண்டா குறித்து சில தகவல்

டையர்பார்க் பூங்காவுடனான விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் மூலம், கடந்த மாதம் அங்கிருந்து ஐந்து மிஸ்மி டாக்கின் ஆடுகள் டார்ஜிலிங் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.

சிவப்பு பாண்டா, பனி சிறுத்தை, திபத்திய ஓநாய் உள்ளிட்ட அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட பிரத்யேக பூங்காவாக டார்ஜிலிங் உயிரியல் பூங்கா விளங்குகிறது.

இதையும் படிங்க : ட்ரம்ப்பிற்காக கைத்தறி ஆடையை வடிவமைத்த மூத்த தமிழர்

ABOUT THE AUTHOR

...view details