தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உதவி ஆய்வாளர் கொலை: இருவரை கைது செய்தது கேரள காவல்துறை! - Kaliyikavila murder latest update

திருவனந்தபுரம்: கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை பாலக்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

SI death in Kanyakumari
SI death in Kanyakumari

By

Published : Jan 10, 2020, 4:21 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் குமரி-கேரள எல்லைப் பகுதியிலுள்ள களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் வில்சன், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இருவர் தலையில் குல்லா அணிந்தவாறு தப்பியோடும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சையத் இப்ராகிம், அப்பாஸ் ஆகிய இருவரை பாலக்காடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல ஆண்டுகளாக கேரளாவின் பாலக்காட்டில் வாழ்ந்துவருகின்றனர்.

இருவரை விசாரித்துவரும் காவல்நிலையம்

கைது செய்யப்பட்ட இவர்களை, க்யூ பிரிவு காவல்துறையினரும், கேரளா காவல்துறையினரும் விசாரித்துவருகின்றனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதம் தொடர்பான கொலைகளிலும் இவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் டிஜிபி திரிபாதி நேரில் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details