புதுச்சேரியை, அடுத்த புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் காசியம்மாள்( 57), ராசம்பா (75). இவர்கள் இருவரும் நெல்லித்தோப்பில் உள்ள மீன் அங்காடியில் நேற்று மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இருவரும் படுகாயமடைந்தனர்.
மேற்கூரை இடிந்து இருபெண்கள் படுகாயம்: முதலமைச்சர் நாராயணசாமி ஆறுதல் - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி: மீன் அங்காடியின் மேற்கூரை இடிந்து விழந்ததில் பெண்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்கள் காயமடைந்த சம்பவம் அறிந்த முதலமைச்சர் நாராயணசாமி, அலுவலர்களுடன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடிந்து விழுந்த மீன் மார்க்கெட் பழைய கட்டடம் என்பதால், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விரைவில் இந்த கட்டடம் இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டித்தரப்படும் என்றார்.