தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காட்டு காளானை சாப்பிட்டதில் மேலும் இருவர் உயிரிழப்பு: பலருக்கு தீவிர சிகிச்சை - மேகாலயா காட்டு காளான் சாப்பிட்ட குடும்பங்கள்

ஷில்லாங்: காட்டு காளானை சாப்பிட்ட மூன்று குடும்பங்களில் ஏற்கனவே இரண்டு பேர் இறந்த நிலையில், மேலும் இருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

்ே்
்ே

By

Published : Apr 30, 2020, 11:35 AM IST

மேகாலயாவில் மேற்கு ஜெயந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள லமின் கிராமத்தில் வசிக்கும் மூன்று குடும்பங்கள், அப்பகுதி மலைக்குச் சென்று அங்கிருந்த காளான்களை எடுத்துவந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

இதன் விளைவாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் சின்ரான் கோங்லா (16), லாபின்ஷாய் கோங்லா (28) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இதற்கு முன் உயிரிழந்த கட்டிலியா கோங்லா (26) என்பவரின் சகோதரர்கள் ஆவர்.

மேலும், பலர் வெவ்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:'பெற்றோரின் சண்டை குழந்தைகளை பாதிக்கும்'- உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details