கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 14 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால், எதிர்க்கட்சியான பாஜக-வை விட இக்கூட்டணியின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
சூடுபிடிக்கும் கர்நாடக அரசியல் களம்; மேலும் 2 எம்எல்ஏக்கள் ராஜினாமா! - கர்நாடாகா எம்எல்ஏ ராஜினாமா
பெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த மேலும் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ஹோகோட்டே சட்டப்பேரவை உறுப்பினர் எம்டிபி நாகராஜ், சிக்கபள்ளாபூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே சுதாகர் ஆகியோர் இன்று மாலாை சபாநாயகரை ரமேஷ் குமாரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து, மேலும் ஒருவர் ராஜினாமா செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்பிரச்னையில் இருந்து காங்கிரஸ் - மஜத கூட்டணி மீண்டெழுவதில் கூடுதல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு ராஜினாமா கடிதத்தையும் ஏற்கவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.