ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் இன்று காலையில் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கிருந்த பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
ஜம்முவில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழப்பு - Two militants killed
ஸ்ரீநகர்: பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
![ஜம்முவில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-3053898-thumbnail-3x2-jammu.jpg)
ஜம்முவில் துப்பாக்கிச் சூடு - இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழப்பு
இந்தத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரமுல்லாவில் வாட்டர்காம் என்ற பகுதியில் ஒரு பயங்கரவாதியின் உடலும், ஆர்சட் பூங்காவில் மற்றொரு உடலும் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Last Updated : Apr 20, 2019, 9:11 AM IST