தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில் கடம்பா வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்படி, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
தெலங்கானாவில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை... முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய 400 காவலர்கள்! - ஆசிபாபாத் துப்பாக்கி சூடு
ஹைதராபாத்: கடம்பா வனப்பகுதியில் காவல் துறைக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்போது அங்கு, பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் திடீரென காவல் துறையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதில் இரண்டு மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலின்போது மாவோயிஸ்ட்டின் முக்கிய குற்றவாளி எம். அடெல்லு என்கிற பாஸ்கர் தப்பித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், பாஸ்கர் ஆசிபாபாத் நகரத்திற்கு அருகிலுள்ள சிலேட்டிகுடாவில் இருக்கிறார் என்ற தகவல் காவல் துறைக்கு கிடைத்ததையடுத்து, சுமார் 400 காவலர்கள் வனப்பகுதிக்குள் தேடுதல் வேட்டையில் களமிறங்கினர்.
இம்மாதத்தில் மட்டுமே மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட்களுக்கும், காவல் துறைக்கும் தாக்குதல் நடைபெற்றது. மாவோயிஸ்ட் ஊடுருவல் காரணமாக நடந்த என்கவுன்ட்டரினால் தெலங்கானாவில் மூன்று மாவட்டங்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்