லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத் மற்றும் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வது சட்டவிரோத செயல் எனவும், அவற்றைத் தடுக்க கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் இன்று மூன்றாவது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து பேசிய ஸ்டேஷன் ஹவுஸ் காவலர் கே.பி. சிங், இந்த வழக்கு நதீம், சல்மான் ஆகிய இருவர் மீது பதியப்பட்டுள்ளது. இவர்கள் ஹரித்வாரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்துவருகின்றனர். இவர்களில் நதீம் என்பவர் ஏற்கனவே திருமணமான இந்து மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துவந்துள்ளார்.
இருவரும் தொலைபேசியிலும் உரையாடுவதை அறிந்த அப்பெண்ணின் கணவர் தங்களது வசிப்பிடத்தை மாற்றியுள்ளனர். இருப்பினும், அப்பெண்மணியிடம் அவர்கள் தொடர்ந்து உரையாடிவருவதாகவும், மதம் மாறினால் உடனடியாகத் திருமணம் செய்துகொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர். இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
அப்போது கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்படாததால் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் காவலர்கள் தெரிவித்ததாகவும், பின்னர் இந்த வழக்கு தொடர்பாக எவ்வித விசாரணையும் எடுக்காததால் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: உ.பி.யில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பதிவான முதல் வழக்கு