ஒடிசா மாநிலம், சாம்பல்பூர் மாவட்டம், தால் கிரமத்தில் உள்ளது பத்பாஹல் வனச் சரகம். இங்கு நேற்று ராய்ராகோல் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் தேன் சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு தேன் உண்ண வந்த கரடி ஒன்று, மனிதர்களும் தேன் சேகரிக்க வந்திருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து அவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளது.
உயிருக்கு பயந்து ஓடியவர்களை கரடி துரத்திப் பிடித்து தாக்கியதில், இரண்டு பேர் மரத்தின் மீதேறி உயிர் தப்பினர். மீதமிருந்த மூன்று பேரில் தாக்குதலுக்கு ஆளாகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.